search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.கே.ரெங்கராஜன் எம்பி"

    நீதிமன்றம்- போலீசாரை விமர்சித்து பேசிய எச்.ராஜாவை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது என்று டி.கே.ரெங்கராஜன் எம்பி தெரிவித்துள்ளார். #hraja
    திருச்சி:

    திருச்சியில் ஓய்வூதியர்கள் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி எம்.பி., டி.கே.ரெங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாகவும், வேலை வாய்ப்பு உருவாக்காத அரசாகவும், விவசாயிகளின் நலன் காக்காத அரசாகவும் உள்ளது. பா.ஜ.க. தமிழகத்தில் பெரிய கட்சி கிடையாது. ஆனால் அ.தி.மு.க.வையும், காவல்துறையையும் கைக்குள் வைத்து கொண்டு பெரியார் சிலையை அவமதித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

    சமீபகாலமாக பா.ஜ.க. தேசிய செயலாளர்  எச்.ராஜா, நீதிமன்றம், காவல்துறை பற்றி அவதூறாக பேசி வருகிறார். தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பது தவறு. அவருக்கு ஆதரவாக மாநில அமைச்சர்கள் செயல்படுகின்றனர்.  எச்.ராஜாவின் கருத்துக்கள் ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக உள்ளது . இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள்  ஒன்றிணைய வேண்டும்.

    ஆர்ப்பாட்டம் நடத்தினாலே கைது செய்யும் அரசு, கோர்ட்டு, காவல்துறை பற்றி பேசிய எச்.ராஜாவை கைது செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்கிறது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் பொதுமக்கள், லாரி ஓட்டுனர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

    விலைவாசி உயர்வால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே  வருகிறது. இதனால் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். எனவே பா.ஜ.க.வுக்கு மாற்றாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #hraja
    ×